ராஜீவ் காந்தி
கொலை வழக்கு விசாரணை, பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு, 19_1_1994_ல்
தனிக்கோர்ட்டில் தொடங்கியது. அதாவது, கொலை நடந்த 31 மாதங்களுக்குப்பிறகு
சாட்சிகள் விசாரணை தொடங்கியது. முதல் சாட்சியாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்
விசாரிக்கப்பட்டார். இதற்கிடையில், 26 பேர் மீதும் `தடா' சட்டத்தின் கீழ்
வழக்கு தொடர்ந்தது தவறு என்று ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுத்தாக்கல்
செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்தது. நீதிபதி எஸ்.எம்.சித்திக்கை
மாற்றவேண்டும் என்று நளினி தாக்கல் செய்த மனுவையும், ஐகோர்ட்டு தள்ளுபடி
செய்தது.
`தடா'
சட்டத்தின் கீழ் விசாரணை செய்யக்கூடாது என்றும், தனிக்கோர்ட்டு இந்த வழக்கை
பகிரங்கமாக விசாரிக்க வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும்
ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெறும்போதே
தனிக்கோர்ட்டு நீதிபதியாக இருந்த நீதிபதி எஸ்.எம்.சித்திக் ஐகோர்ட்டு
நீதிபதியாக நியமிக்கப்பட்டார். எனவே, இந்த வழக்கை நீதிபதி வி.நவநீதம்
விசாரித்தார். வழக்கு விசாரணை ரகசியமாக நடந்ததால், விவரங்கள்
வெளியிடப்படவில்லை. இந்த வழக்கில் 28_1_1998 அன்று நீதிபதி நவநீதம்
தீர்ப்பு அளித்தார். நளினி உள்பட 26 பேருக்கும் தூக்குத்தண்டனை
விதிக்கப்பட்டது. நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்ததாவது:-
"குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், இந்த மிருகத்தனமான, கொடூரமான கொலையை செய்த 26 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 26 பேரும் சாகும் வரை தொங்கவிடப்படவேண்டும். தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்த பின்னர் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டிருந்தார். தீர்ப்பு மொத்தம் 2 ஆயிரம் பக்கங்களில் இருந்தது. இதுபோன்ற பெரிய தீர்ப்பு, இந்தியாவில் வேறு எந்த வழக்கிலும் கூறப்படவில்லை. ஒரே வழக்கில் 26 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது இந்திய வரலாற்றில் இதுவே முதல் தடவை. மகாத்மா காந்தி கொலை வழக்கை விசாரிக்க 1 ஆண்டு காலம் ஆனது. இந்திரா காந்தி கொலை வழக்கை விசாரிக்க 2 ஆண்டு ஆனது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பு சொல்ல 7 ஆண்டுகள் பிடித்தன. தண்டனை அடைந்தவர்களில் நளினி, அவரது தாயார் நர்சு பத்மா, நளினியின் சகோதரர் பாக்கியநாதன், நளினியின் கணவன் முருகன் ஆகிய 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

தீர்ப்பு
வழங்கப்படுவதற்கு முன்பு, பூந்தமல்லி விசேஷ சிறையில் அடைக்கப்பட்டிருந்த
26 பேரும், இரும்பு கிரில் போடப்பட்ட பாதை வழியாக சிங்கம், புலிகளை
சர்க்கஸ் கூடாரத்திற்கு கொண்டு செல்வதைப்போல கோர்ட்டுக்கு கொண்டு
வரப்பட்டனர். தீர்ப்பு எப்படி இருக்குமோ என்று நளினி, அவரது தாயார் நர்சு
பத்மா, மற்றொரு பெண் செல்வலட்சுமி ஆகியோர் பதற்றத்துடன் காணப்பட்டனர். மரண
தண்டனை என்று தீர்ப்பு கூறப்பட்டதும் 3 பேரும் கதறி அழுதனர்.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 15 பேர் விடுதலைப்புலிகள். 10 பேர்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பெங்களூரைச் சேர்ந்தவர். 5 பேர்
பெண்கள். ஒரே வழக்கில் 5 பெண்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படுவதும்
இதுவே முதல் தடவை.
சாதாரணமான
கொலை வழக்குகளில், ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய முடியும். ஆனால், ராஜீவ்
காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேர் மீதும், "தடா"
சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்ததால், தண்டனை பெற்றவர்கள்
"சுப்ரீம்" கோர்ட்டில் மட்டுமே அப்பீல் செய்ய முடியும். நளினி உள்பட 9 பேர்
சார்பில் வக்கீல் எஸ்.துரைசாமி இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி
வாதாடினார். தீர்ப்பு குறித்து அவர் கூறுகையில், "சி.பி.ஐ. சார்பில்
தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைதான் தீர்ப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். இதற்காக
அரசியல் அல்லாத கமிட்டி அமைக்கப்பட்டு நிதி திரட்டப்படும் என்று
தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலையில் புலன் விசாரணை நடத்திய சி.பி.ஐ.
சிறப்பு புலனாய்வு குழுத்தலைவர் கார்த்திகேயன், தீர்ப்பு பற்றி தனது
கருத்தை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
"மத்திய
புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.) சிறப்பு புலனாய்வு குழு, ராஜீவ் காந்தி
கொலையின் உண்மையை கண்டறிய ஒருமித்து செயல்பட்டது. அதற்குரிய பலன், இந்த
தீர்ப்பில் கிடைத்து விட்டது. சி.பி.ஐ. விசாரணையின் முடிவு சரியே என்று
இந்த தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இந்திய போலீஸ் துறையாருக்கும்
சளைத்தவர்கள் அல்ல என்பதை புலனாய்வு குழு நிரூபித்துள்ளது. நீதி
கிடைத்துள்ளது. "வாய்மையே வெல்லும்", "சத்தியமே ஜெயதே" என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கார்த்திகேயன் கூறினார். தீர்ப்பு
கூறப்படுவதையொட்டி, கோர்ட்டைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு
இருந்தது. தீர்ப்பு கூறப்பட்டதும், கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்குக் கொண்டு
போகப்பட்டனர்.